இதுவல்லவா காதல்: கணவன் இறந்தவுடன் மனைவி உயிரும் பிரிந்த சோகம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்த அடுத்த நான்காவது நிமிடத்தில் மனைவியும் மரணித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Leicester நகரை சேர்ந்தவர் Wilf Russell (93), இவர் மனைவி Vera (91)

மிகவும் அன்பான காதல் தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு திருமணமாகி 71 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக Wilf முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்தார். அவர் மனைவி Vera அருகிலிருந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் Wilf மரணமடைந்தார். அவர் மரணமடைந்து சரியாக நான்கு நிமிடங்கள் கழித்து அவர் மனைவி Veraன் உயிரும் பிரிந்துள்ளது.

மரணத்திலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை பற்றி அவர்கள் பேத்தி Stephanie கூறுகையில், நான் சில தினங்களுக்கு முன்னர் என் பாட்டியை பார்க்க சென்றேன்.

அப்போது அவர் Wilf எங்கே? நாங்கள் மிகச்சிறந்த தம்பதிகள் தானே? என தன்னிடம் கேட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments