பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வருவது உறுதி: அதிர்ச்சி ரிப்போர்ட்

Report Print Raju Raju in பிரித்தானியா

உடல் உழைப்பே இல்லாமல் இருப்பதால் பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் இதய பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் பிரித்தானியர்கள் ஆரோக்கியம் தொடர்பாக முக்கிய ஆய்வை நடத்தியது.

அதில், பிரித்தானியாவில் பலர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் அதிகளவில் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.

உட்கார்ந்த இடத்திலேயே வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பது, செல்போன் மற்றும் கணணிகள் இயக்குவது, புகைப்பிடிப்பது போன்றவையெல்லாம் உடல் உழைப்பு இல்லாமைகான விடயங்கள் என கூறப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள்
  • பிரித்தானியாவில் ஆண்களை விட பெண்களே 36 சதவீதம் உடல் உழைப்பு தருவதில்லை.
  • ஒரு ஆண் சராசரியாக வருடத்துக்கு 78 நாட்கள் உடல் உழைப்பு தராமல் உட்கார்ந்தே உள்ளார்.
  • உலகம் முழுவதும் 5 மில்லியன் பேர் உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் உயிரிழக்கின்றனர்.
  • பிரித்தானியாவில் மூன்றில் ஒருவருக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளது.
  • பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகம் செயலற்று இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது

உடல் உழைப்பு சம்மந்தமான வேலைகள், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவைகள் செய்தால் இதய நோயிலிருந்து தப்பலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments