ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியா அபராதம் செலுத்த வேண்டுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு எவ்வித அபராத தொகையையும் செலுத்தாது என Brexit ஆதரவு பிரசார குழுவின் மாநிலச் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தில் பிரதமர் தெரெசா மே நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த டேவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கென வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்கான வாகெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தருணம் தற்போது கூடி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்தின் மீது பிரித்தானியாவுக்கு இருக்கும் கடமைகள், தனிப்பட்ட உரிமைகள் என அனைத்தும் மதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்து பேசி சட்ட ரீதியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டேவிஸ் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எவ்வித அபராத தொகையையும் செலுத்தாது என்றும், இதுவரை பெரும் தொகையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்தி வந்த காலம் முடிவுக்கு வரப்போகிறது எனவும் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments