பிரித்தானியாவில் தாக்குதல் நடத்தியவர் குறித்து தவறான தகவல் வெளியிட்டது யார்?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி தொடர்பாக சில தவறான தகவல்களை பிரபல ஊடகம் வெளியுட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் காலித் மசூத் என்ற தீவிரவாதி நடத்திய பயங்கரவாத தாக்குதலால் இதுவரை 5 பேர் பலி மற்றும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் Abu Izzadeen என்று முதலில் கூறப்பட்டது. இது சில ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. அதன் பின் தாக்குதல் நடத்திய நபர் Abu Izzadeen கிடையாது என்றும்,காலித் மசூத் தான் என உறுதிபட தெரிவித்தனர்.

Abu Izzadeen தான் தாக்குதல் நடத்தியுள்ளான் என்று கூறி பிரபல ஆங்கில ஊடகமான சேனல் 4 முன்னதாக தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சிலர் Abu Izzadeen தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான் என்று கூறி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

உடனடியாக இதை அறிந்த Abu Izzadeen-ன் சகோதரர் லண்டனில் நடந்த தாக்குதலை Abu Izzadeen நடத்தவில்லை என்றும் அவன் ஜெயிலில் தான் இருக்கிறான் என்று தெரிவித்துள்ளார்.

Abu Izzadeen கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டியதாக கூறி கைது செய்யப்பட்டார். அதன் பின் 2009 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments