பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்..வாட்ஸ் அப் பயன்படுத்திய தீவிரவாதி: யாருடன் பேசியுள்ளான்?

Report Print Santhan in பிரித்தானியா

பிர்த்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளான்.

பிரித்தானியாவில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் காலித் மசூத் என்ற நபர் கண்மூடித்தனமாக காரை வைத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு, பாராளுமன்றத்தின் வளாகத்தின் முன் தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்த தாக்குதலில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காலித் மசூத் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு தாக்குதல் நடத்துவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னர் வரை வாட்ஸ் ஆப் பயன்படுத்தியுள்ளான். இதனால் அவர் யாருடைய தூண்டுதலின் பேரிலே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

மசூத்தை யார் தூண்டியது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments