லண்டன் தாக்குதலில் இஸ்லாமிய பெண்ணை இழிவுப்படுத்துவதா? இப்படியும் சில அரக்கர்கள்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் நிகழ்ந்த பாராளுமன்ற தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமிய பெண் ஒருவரின் செயலை சமூக வலைத்தளத்தில் இழிப்படுத்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதி ஒருவன் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளான்.

இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில், தீவிரவாதி நடத்திய தாக்குதலின்போது இஸ்லாமிய பெண் ஒருவருடைய செய்கையை இழிப்படுத்தி நபர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் ஒருவர் வெஸ்ட்மின்ஸ்டர் சாலையில் விழுந்துக்கிடந்துள்ளார். நபருக்கு சிலர் முதலுதவி சிகிச்சையை அளித்து வந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக நடந்துச்சென்ற இஸ்லாமிய பெண்ணின் செயலை சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் இழிவுப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது, ‘நபர் ஒருவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அதனைக் கண்டுக்கொள்ளாமல் எவ்வித அக்கறையும் காட்டாமல் இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னுடைய கைப்பேசியை பயன்படுத்தியவாறு நடந்துச் செல்கிறார்’ என இனவெறியை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நபரின் இக்கருத்திற்கு தற்போது பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நபரின் கருத்திற்கு ஒருவர் பதலடி கொடுத்தபோது ‘லண்டனில் தாக்குதலை நடத்தியவனை விட இந்தக் கருத்தை கூறிய இவர் தான் உண்மையான கொடூரன்.

இஸ்லாமிய பெண் என்பதற்காக அவரை எப்படியும் அவமதிப்பதா? பெண் நடந்து வருவதை சற்று உற்றுக் கவனித்தால் அவர் மிகவும் கலக்கத்துடனும் வேதனையான முகத்துடன் நடந்துச் செல்வதை கவனிக்க முடியும்’ எனப் பதிலளித்துள்ளார்.

இது போன்று மற்றொருவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒருவர் கீழே அடிப்பட்டுக் கிடக்கும் நிலையில் அருகில் மற்றொரு நபர் எவ்வித கவனமும் செலுத்தாமல் நடந்துச் செல்கிறார். ஆனால், இவரை ஏன் இஸ்லாமிய பெண்ணை அவமதித்தது போன்று விமர்சனம் செய்யவில்லை?’ என காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமிய பெண் என்பதற்காக அடிப்படை காரணங்கள் இல்லாமல் அவர்களை விமர்சிப்பது மனிதத்தன்மை அல்ல’ என பலரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments