எலிசபெத் மகாராணி சார்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

எலிசபெத் மகாராணியும் அவர் கணவரும் கடந்த 1947ல் திருமணத்தின் போது வெட்டிய கேக் துண்டுகள் தற்போது ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளன.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் இளவரசர் பிலீப்புக்கும் கடந்த 1947ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

அப்போது அவர்களுக்கு ஆறு ஆடி உயரத்தில் 600 பவுண்ட் எடையில் ஒரு கேக் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த கேக் பின்னாளில் மிக பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2015ல் கேக்கின் சில பகுதிகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், எலிசபெத் மகாராணி மற்றும் பிலீபின் 70வது திருமண ஆண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.

இதில் மகாராணி சம்மதத்துடன் அவர் திருமணத்தின் போது பயன்படுத்திய கேக்கின் துண்டு ஏலத்துக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேக் துண்டு 100லிருந்து 150 பவுண்ட் என்ற விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments