கொள்ளையடிக்க சென்ற வீட்டில் உயிரை விட்ட நபர்: நடந்தது என்ன?

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் கொள்ளையடிக்கு வீடு ஒன்றில் நுழைய முயன்ற நபர் எதிர்ப்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Bradford என்ற நகரில் மருந்துகள் விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகிலேயே உரிமையாளரின் வீடும் அமைந்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னால் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க நபர் ஒருவர் முயன்றுள்ளார்.

வீட்டின் கூரை மீது ஏறிய அவர் கழிவரை வழியாக உள்ளே குதிக்க முயன்றுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவரது ஆடை ஒரு பிளவில் சிக்கிக்கொண்டது. ஆடையையும் நீக்க முடியாமல் வெளியேவும் வர முடியாமல் நபர் போராடி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டின் கூரையை சோதனை செய்தபோது அங்கு நபர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மருத்துவர்களுடன் வந்த பொலிசார் சடலத்தை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, நபரின் கழுத்துப் பகுதியில் ஆடை சுற்றிக்கொண்டதால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சடலத்தை சோதனை செய்தபோது நபர் ஒரு வாரக் காலமாக இதே இடத்தில் சடலமாக கிடந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை கூடுதல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments