தீப்பற்றி எரியும் பிரித்தானியா கொடி! லண்டனை கதிகலங்க வைத்த போஸ்டர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பாராளுமன்றத்தில் ஐ.எஸ் தீவிரவாதி நடத்திய தாக்குதல் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதலுக்கு மறுநாள் லண்டனில் தோன்றிய போஸ்டர்கள் கதிகலங்க வைத்துள்ளது.

லண்டனில் உள்ள சென்சிங்டன் மற்றும் செல்சியா பேருந்து நிலையங்கள் உட்பட சில இடங்களில் குறித்த போஸ்டர் தோன்றியுள்ளது. அதில், பிரித்தானியா தேசிய கொடி தீப்பற்றி எரிந்துக்கொண்டிருப்பது போல் உள்ளது.

போஸ்டரை கண்டு அதிர்ச்சியடைந்த Paul Pavli என்ற நபர் கூறியதாவது, பேருந்து நிலையத்தில் தோன்றிய போஸ்டரை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்தேன். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் போஸ்டரை அகற்றி அதிலிருந்த கைரேகையை எடுத்தனர்.

நாட்டிற்கு இன்னும் பிரச்னை கொடுக்க நினைப்பவர்களே இந்த போஸ்டரை வைத்திருக்க வேண்டும். நம் சமூகத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த விரும்பும் மக்கள் இந்த உலகில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments