பிரித்தானியாவில் மீண்டும் குண்டுவெடிப்பா? அதிர்ச்சியில் மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்றம் வாளாகத்தில் Khalid Masood என்ற நபர் நடத்திய தாக்குதலில் தற்போது வரை 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 40 பேர் வரை காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த துக்கத்தில் இருந்தே இன்னும் லண்டன் மக்கள் மீளாத நிலையில், மீண்டும் பாராளுமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடித்ததாக தகவல் பரவியதைத் தொடர்ந்து பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இது குறித்து பொலிசார் கூறுகையில், எந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் பிரட்கேட்ஜ்வாக் பகுதியில் ஒரு பை இருந்ததாகவும், அதை தாங்கள் எடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் எந்த ஒரு குண்டு வெடிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments