பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர்: அதிர்ச்சி தரும் தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் பாரளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதி என்று கூறப்படும் மர்மநபர் ஒருவர் நடத்திய தாக்குதல் தான் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்போதைய நிலைமையில் தாக்குதல் நடத்திய நபர் ஆசியாவைச் சேர்ந்தவர் என்று செய்திகள் வெளியாகின. அதன் பின் சந்தேகப்படும் நபர் இவர் இல்லை என்று மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் பற்றி சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிந்த நபரின் பெயர் Khalid Masood (52) என்றும் இவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவன் பிரித்தானியாவின் கெண்ட் பகுதியில் பிறந்ததாகவும், ஆனால் தற்போது வேஸ்ட் மிட்லண்ட்ஸ் தான் வாழ்ந்து வந்துள்ளான் என்று தெரிவித்துள்ளனர். ஆங்கில ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இந்த நபர் மீது சில வருடங்களுக்கு முன்னர்(அதாவது 2003) பல்வேறு குற்றச்சம்வங்கள் இருந்ததாகவும், இது தொடர்பாக பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் இல்லாததால், இந்த நபரை பொலிசார் கண்டு கொள்ளவில்லை. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இவனிடம் ஐஎஸ்சிடம் தொடர்பிருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments