லண்டனில் தீவிரவாத தாக்குதல் என்பது ஒரு அங்கம்: லண்டன் மேயர் பரபரப்பு பேச்சு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் போன்ற பெரு நகரங்களில் தீவிரவாத தாக்குதல் என்பது ஒரு அங்கம் என மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

40க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இது இஸ்லாமிய தீவிரவாத செயலா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையில் லண்டன் மாநகரின் மேயர் சாதிக் கான் இது குறித்து கூறுகையில், லண்டன் போன்ற பெருநகரங்களில் தீவிரவாத தாக்குதல் என்பது ஒரு அங்கம் தான்.

நாம் தான் எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். லண்டன் நகரை பாதுகப்பாக வைத்திருப்பதை தவிர எனக்கு வேறு முக்கிய பணிகள் கிடையாது என கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் தந்திரங்களை கையாண்டால் நாம் அதற்கு பதிலடி தரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments