பிரித்தானிய பாராளுமன்ற தாக்குதல் எதிரொலி: வீடு வீடாக சோதனையிடும் ஆயுதப்படை பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பாராளுமன்ற வளாக தாக்குதலை அடுத்து ஆயுதப்படை பொலிசார் பர்மிங்காம் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈஃபில் கோபுரத்தில் விளக்குகளை அனைத்து குறித்த துயரத்தில் பங்கு கொள்வதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆயுதம் தாங்கிய பொலிசார் பர்மிங்காம் பகுதியில் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். Hagley சாலை பகுதியில் குறித்த சோதனை தீவிரமாக நடத்தப்பட்டதாக பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொலிசாரின் தேடுதல் வேட்டையானது நேற்றைய பாராளுமன்ற தாக்குதலலுடன் தொடர்புடையதா என எவ்வித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

Hagley சாலையில் இருந்து மட்டும் 3 நபர்களை கைது செய்துள்ளனர். கைதானவர்களை உடனடியாக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments