பிரித்தானியாவை உலுக்கிய பாராளுமன்ற தாக்குதல்: வெளியான நேரடிக் காட்சிகள்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத் தாக்குதலில் 4 பேர் பலியானதை தொடர்ந்து அதன் நேரடி வீடியோக் காட்சிகள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் வேளையில் இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

சுமார் 2.40 மணியளவில் மர்ம நபர் ஒருவர் Hyundai 4x4 என்ற காரில் லண்டனில் உள்ள Westminster பாலத்தில் அசுர வேகத்தில் விபத்துக்களை ஏற்படுத்தியவாறு பறந்துள்ளான்.

வழி நெடுகிழும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

பாலத்தின் மீது கார் தாறுமாராக பயணம் செய்தபோது அதிலிருந்து உயிர்ப்பிழைக்க பெண் ஒருவர் தேம்ஸ் ஆற்றில் குதித்துள்ளார்.

இதன் நேரடிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக அவரை பொதுமக்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

இத்தாக்குதலை நிகழ்த்திய நபர் பாராளுமன்ற வளாகத்திற்கு நுழைந்தபோது, Keith Palmer(48) என்ற பொலிஸ் அதிகாரியை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளான்.

இதில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பாராளுமன்றத்தில் நுழைய முடியாததால் கொலையாளி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளான்.

மர்ம நபர் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் 40 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அடங்குவர்.

கொலையாளி பற்றிய அடையாளங்கள் பொலிசாருக்கு தெரிந்திருந்த நிலையிலும், அவரைப் பற்றி தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பாராளுமன்றத்தில் இருந்த பிரதமர் தெரசா மே பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு பாராளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத அமைப்பு இருப்பதாக பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த பொலிசாரும் உளவுப்படையினரும் முடக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments