பேஸ்புக் வழியாக ராஜினாமா கடிதம் அனுப்பிய பெண் பொலிஸ் அதிகாரி: காரணம் என்ன?

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளமான பேஸ்புக் வழியாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Devon நகரில் லாரா பீல்(33) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28-ம் திகதி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பொலிஸ் பணி என்பது பொதுமக்களுக்கான சேவையாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது இது ஒரு வணிகமாக மாறிவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடன் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரிகளும் பெரும் துயரத்தையும் மன உளைச்சலையும் சந்தித்து வந்தனர்.

அரசாங்கம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை.

நான் எதிர்ப்பார்த்த மக்கள் பணியை இத்துறையில் செய்ய முடியவில்லை. பணியில் இருந்தபோது உயர் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப் பட்டேன்.

பொதுமக்களுக்கு அவசர உதவி செய்ய அனுப்புகிறார்கள். ஆனால், எங்களுக்கான பாதுகாப்பை உயர் அதிகாரிகள் தர மறுக்கிறார்கள்.

எனது தந்தையின் வழியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பொலிஸ் துறையில் பணியாற்றி வருகிறேன். ஆனால், இத்துறை தற்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் இவற்றை என்னால் தாங்க முடியவில்லை. மன உளைச்சல் காரணமாக உடல்நிலை அடிக்கடி பாதிப்படைகிறது.

இனிமேலும் இப்பணியில் நீடிக்க முடியாது என்பதால் இக்கடிதத்தின் மூலம் எனது ராஜினாமாவை தெரிவித்துக்கொள்கிறேன்’ என உருக்கமாக லாரா பீல் தெரிவித்துள்ளார்.

லாரா பீலின் இக்கடிதம் ஆயிரக்கணக்கான நபர்களால் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், லாரா பீலின் ராஜினாமாவை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், இத்தனை ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக உயர் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments