பயணிகள் விமானத்திற்குள் புகுந்த எலி: விமானிகள் எடுத்த அதிரடி முடிவு

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த விமானத்திற்குள் எலி ஒன்று புகுந்ததை தொடர்ந்து விமானிகள் எடுத்த அதிரடி முடிவு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட தயாராக இருந்துள்ளது.

விமானத்தில் பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்ததும் விமானம் ஓடுதளத்தை நோக்கி புறப்பட தயாரானது.

அப்போது, திடீரென பணிப்பெண்கள் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘விமானத்தில் எலி ஒன்று புகுந்துள்ளது. அது எங்கு இருக்கிறது என தெரியவில்லை’ என கூறியுள்ளனர்.

இந்த அறிவிப்பை கேட்டு சிரித்த விமானிகள் ‘எலியாக இருந்தாலும் கடவுச்சீட்டு இல்லாமல் அமெரிக்காவுக்கு பயணமாக முடியாது.

நம் அனைவருக்கும் வெறொரு விமானம் வந்தால் தான் பயணம் மேற்கொள்ள முடியும்’ என விமானிகள் கூறியுள்ளனர்.

சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு மற்றொரு விமானம் வந்ததும் அதில் பயணிகள் அமர்ந்ததும் விமானம் பத்திரமாக அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளது.

விமானத்தில் எலி பயணிக்கும்போது சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் விமானிகள் எடுத்த நடவடிக்கையை அதிகாரிகளும் பயணிகளும் பாராட்டியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments