பிரித்தானியாவில் புதிய சட்டம் அமலானது! ஓட்டுனர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் செல்போன் பயன்படுத்தினால் £200 அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் நேற்று முதல் அமலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் பயன்படுத்துவதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தீவிரமாக கட்டுப்படுத்தும் வகையில், செல்போன் பயன்படுத்தி கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு £200 (37,174 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்’ என்ற புதிய கட்டுப்பாடு சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த புதிய சட்டங்கள் நேற்று (மார்ச் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது உள்ளிட்ட குற்றங்களுக்கு ஏற்கனவே 3 புள்ளிகள் வழங்கப்பட்டன.

ஆனால் தற்போது இதுபோன்ற குற்றங்களில் ஈடுப்படும் ஓட்டுனர்களுக்கு 6 புள்ளிகள் வழங்குவதுடன் அவர்களுக்கு £200 அபராதம் விதிக்கப்படும்.

எனினும், புதிய சட்டம் அறிமுகமான முதல் நாளிலேயே சில ஓட்டுனர்கள் செல்போன்களை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்குவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஓட்டுனர்களுக்கு அபராதம் தொகை விதித்ததுடன் பொலிசார் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான Alex Steeles(39) என்பவர் பேசியபோது, ‘சட்டம் அறிமுகமான முதல் நாளிலேயே மான்செஸ்டர் நகரில் வாகனம் ஓட்டிக்கொண்டு செல்போன் பயன்படுத்திய பெண் ஓட்டுனர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் தொடர்பான புள்ளிகளும் அபராத தொகையும் அதிகரித்துள்ளது ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சாலை விபத்துக்களை தடுக்கவும் சாலை விதிகளை கடுமையாக கடைபிடிக்கவும் இதுபோன்ற சட்டங்கள் மிக அவசியம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments