ஒரு மாதம் கழித்து வெளியில் வந்த எலிசபெத் மகாராணி! உண்மையில் என்ன நேர்ந்தது அவருக்கு?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசெபத் அவர்களின் (90) புகைப்படம் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக வெளிவராமல் இருந்தது.

வருடம் தவறாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் பங்கேற்கும் அவர் இந்த வருடம் நடைபெற்ற விழாவில் பங்கேற்கவில்லை.

அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக செய்திகள் ஒரு புறம் வந்துகொண்டிருக்க அவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து எலிசெபத் மகாராணி குடும்பத்தினர் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கையை வெளியிட்டார்கள்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் மகாராணி எலிசெபத் தேவாலயத்துக்கு சென்று வந்ததாக அவர் மகள் இளவரசி Anne கூறியுள்ளார்.

மகாராணி கடுமையான சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாகவும், அதே நிலையில் அவர் கிறிஸ்துமஸ் விழாவுக்கு வந்திருந்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கும் என்பதால் அவர் வரவில்லை.

தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் இளவரசி Anne தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments