லண்டன் பேருந்தில் பொலிஸ் குதிரை: காரணம்? வைரல் புகைப்படம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா, தலைநகர் லண்டனின் அடையாளமாக திகழும் சிவப்பு இரட்டை அடுக்கு பேருந்தில் குதிரை ஒன்று ஏற முயன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Islington வழியாக பயணித்த எண் 43 பேருந்திலே பொலிஸ் குதிரை ஒன்று ஏற முயன்றுள்ளது. அரசியல்வாதி Simon Crowcroft என்ற நபரே குறித்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் வைரலாக பொலிசார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர், புகைப்படத்தில் இருக்கும் Invictor என்னும் குதிரை, Mounted காவல்நிலைய காவலர் டான் ஸ்மித்துக்கு ஒதுக்கப்பட்ட குதிரை.

குதிரை பேருந்தில் ஏறி பயணிக்க முற்படவில்லை, பேருந்தில் கவிழ்ந்து விழுந்த பயணி ஒருவருக்கு உதவ ஸ்மித் சென்ற போது, அவரின் குதிரை பேருந்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தது என விளக்கமளித்துள்ளனர்.

மேலும், Invictor பொலிஸ் அணியின் வீரர் எனவும் பாராட்டி பொலிசார் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments