தமிழருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்த மகாராணி இரண்டாம் எலிசபெத்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானிய வாழ் தமிழரான சங்கர் பாலசுப்ரமணியனுக்கு சர் பட்டம் வழங்கி பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கவுரவித்துள்ளார்.

சங்கர் பாலசுப்பிரமணியன்(59), சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அதன் பின்னர் இவரது குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் உயர் கல்வி பயின்றவர்.

மேலும் பாலசுப்பிரமணியன் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறையை கண்டுபிடிக்கும் பணியில் முக்கியபங்கு ஆற்றி இருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் இவர் புற்றுநோயில் மரபணு பங்களிப்பை புரிந்து கொள்வதில் பங்களிப்பும் செய்துள்ளார்.

ஆங்கிலப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மருத்துவ வேதியியல் துறையில் சங்கர் பாலசுப்பிரமணியனின் சாதனைகளை பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் கவுரவித்து அவருக்கு கவுரவமிக்க சர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments