லண்டன் ரயில் நிலைய கழிப்பறையில் பாலியல் தாக்குதல்! சிசிடிவியில் சிக்கிய புகைப்படம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

லண்டன், Charing Cross ரயில் நிலையத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 25 வயது ஆண் பொலிசில் அளித்துள்ள புகாரில், கடந்த டிசம்பர் 10ம் திகதி, Charing Cross ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து மர்ம நபர் ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், ரயில் நிலைய சிசிடிவியில் பதிவான குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், குறித்த நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபருக்கு இது மிகவும் வேதனைமிக்க சோதனையான தருணம் என குறிப்பிட்டுள்ள பொலிசார், புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து தகவல் அறிந்தால் உடனே தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments