பிரித்தானியாவுக்கு எதிராக சதிவேலைகளை செய்யும் ரஷ்யா! அம்பலமான உண்மைகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா நாட்டிற்கு எதிராக பிரச்சாரத்தையும், சைபர் அட்டாக் எனப்படும் இணைய ஹேக்கிங் விடயத்தையும் ரஷ்யா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா, சைபர் இணைய ஹேக்கிங் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க உளவுத்துறை பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

இதனால் தான் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என ஒபாமா குற்றம்சாட்டிய நிலையில் அதை டொனால்ட் டிரம்ப் மறுத்தார்.

இந்தநிலையில், இப்படிப்பட்ட செயலில் நாங்கள் ஈடுபடவேயில்லை என ரஷ்யாவும் இதை மறுத்தது.

தற்போது இதே போல பிரித்தானியா நாட்டிற்கு எதிராகவும் இதே போல இணைய ஹேக்கிங், அவர்கள் நாட்டை பற்றி பொய் பிரசாரம் செய்வது போன்ற விடயங்களில் புதின் ஆளும் நாடான ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments