பிரித்தானியாவில் செல்வாக்கை இழந்து வரும் சிவப்புக் கூண்டுகள்: பாதுகாக்கப்படுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சிவப்பு நிற கூண்டுகள் என்று அழைக்கப்படும் தொலைப்பேசி பெட்டிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சிவப்புக் கூண்டுகள் என்று அழைக்கப்படும் தொலைப்பேசி பெட்டிகளைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

இதனால் அவர்களுக்கு இது ஒரு முக்கிய சின்னமாகவே விளங்கியது. அவர்களுக்கு குட்டி நண்பன் போல் ஒன்றி இருந்தது.

தற்போது இது பிரித்தானியாவால் புறக்கணிக்கப்பட்டது போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நல்ல மதிப்பும் இருந்தது. ஆனால் அண்மை காலங்களில் இதன் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கடந்த பத்து வருடங்களில் இதன் பயன்பாடு 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரித்தானியாவின் வடக்கு மாகாணத்தின் ஸ்கோர்பியாவில் உள்ளவர்கள், இந்த சிவப்பு நிறம் கொண்ட தொலைப்பேசி பெட்டிகளை பாதுகாப்பதில் கவனமாக உள்ளனர்.

மேலும் இது ஒரு பெக்கிஷம் என போப் போல்டன் என்பவர் பிரச்சாரமும் செய்து வருகிறார்.

இதன் பயன்பாடுகள் குறைந்து வருவதால் அவை அனைத்தும் குப்பைகள் போன்று குறித்த இடத்தில் போடப்படுகின்றன.

ஆனால் இதற்கு எல்லாம் அடைக்கலம் தருபவர் மைக்சோன், அவர் இது குறித்து கூறுகையில், பிரித்தானியாவின் தெற்கு பகுதியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் இந்த பெட்டியை சுமார் 23,000 டொலர்கள் கொடுத்து வாங்கி வந்ததாக கூறியுள்ளார்.

இது ஒன்றும் குப்பை இல்லை என்றும் இது ஒரு தங்க பூசு என புகழாராம் சூட்டுகிறார், இருப்பினும் பிரித்தானியாவில் இதன் சகாப்தம் மெல்ல மெல்ல முடிவடையத்தொடங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments