முஸ்லிம் டிரைவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குடிகார பெண்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

இங்கிலாந்தில் போதையில் இருந்த பெண் ஒருவர் கார் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

வடக்கு இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது தோழியுடன் காரில் ஏறியுள்ளார்.

இருவரும் போதை மயக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, சிறிது தூரம் சென்றவுடன் காரை விட்டு இறங்கிய இருவரும் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

முஸ்லிம் ஓட்டுநரான குறித்த நபரை, “நீ உன் தாய்நாட்டுக்கே திரும்பி செல், உனக்கு தகுதியான வேலையை பார்” என தொடர்ந்து வசைபாடியுள்ளனர்.

அவர்கள் பயணம் செய்ததற்கான பணத்தை கேட்ட பொழுது மறுபடியும் அதையே திரும்ப கூறியுள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்ததை பார்த்தைவுடன், நான் அவ்வாறு கூறவே இல்லையே என்றும் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, எனினும் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments