பிரித்தானிய அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இடது சாரி இயக்கத்திற்கு தடை

Report Print Murali Murali in பிரித்தானியா

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் தீவிர அடதுசாரி இயக்கமான பிரிட்டீஷ் நவ நாஜீக்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த யோசனை பிரித்தானிய பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த குழுவில் இணைந்து கொள்வதோ அல்லது ஆதரவு வழங்குவதோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவ்வாறு செயற்படுவது பாரிய குற்றவியல் குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி நடவடிக்கையில் ஈடுபட்ட அமைப்பு ஒன்று பிரித்தனியாவில் தடை செய்யப்படுவது இதேவே முதல் தடவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானிய உள்துறை அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நேஷன் ஆக்ஷன் என்ற இந்த அமைப்பு இன்வெறி தன்மையுடையது என தெரிவித்துள்ளார். அத்துடன், யூத எதிர்ப்பு சந்தனையை பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் பரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்டமைக்கு, குறித்த அமைப்பின் கிளை நிறுவனம் ஒன்று கொலையாளியை புகழ்ந்து பேசியிருந்தமை குறிப்பித்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments