ஐரோப்பிய நாடுகளில் முதலிடம் பிடித்த பிரித்தானியா! எதில் தெரியுமா?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளில் நீண்ட தூரம் பயணம் செய்து அலுவலக வேலைக்கு செல்லும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் 47 நாடுகளில் நபர் ஒருவர், அவருடைய வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் பயணம் செய்யும் தூரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் மிக அதிகமாக பிரித்தானியாவின் பர்கிங்காம் நகரில் சராசரியாக நபர் ஒருவர் தினமும் 94 நிமிடங்கள் பயணம் செய்வது தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டர் (89 நிமிடங்கள்), லண்டன் (84 நிமிடங்கள்) இடம்பிடித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் பிரித்தானியாவே முதலிடம் பிடித்துள்ளது.

பிரித்தானியர்கள் தினமும் 2 மணிநேரத்திற்கும் மேலாக பேருந்து, ரயிலில் பயணம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments