ஐரோப்பிய யூனியனிலில் இருந்து வெளியேறுவது எப்போது? வழிமுறைகளை வெளியிட வலியுறுத்தல்

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பான விவரங்களை பிரதமர் தெரசா மே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர்.

இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிரான இந்த முடிவால் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தெரசா மே பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியா ஒரு அங்கமாக தொடர வேண்டுமென்ற நிலைப்பாட்டை தெரசா மே கொண்டிருந்தாலும், பொது வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப செயல்பட முடிவெடுத்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்றுமதி-இறக்குமதி, அகதிகள் குடியேற்றம் தொடர்பான முக்கிய அம்சங்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா எப்போது மற்றும் எந்த விதமான நிபந்தனைகளுடன் வெளியேற உள்ளது என்பது தொடர்பான விவரத்தை பிரதமர் தெரசா மே வெளியிட வேண்டும் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி. அன்னா சவுப்ரி கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments