பிரித்தானியாவில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்: அதிர்ச்சி தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா நாட்டில் உள்ள நியூபோர்ட் நகரை சுற்றியுள்ள சாலைகள் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.

சமீபகாலமாக இங்கு இளம் பெண்கள் அந்த வழியாக போகும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்து தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பிரபல பெண் தொழிலதிபர் Ann Barton (71) கூறுகையில், இந்த இடத்தை சுற்றியுள்ள சிட்டி செண்டர் சாலை, கமர்ஷியல் சாலை போன்ற சாலைகளில் விபச்சார தொழில் கொடிகட்டி பறக்கிறது.

இந்த பகுதிகளை அறிவிக்கப்படாத சிவப்பு விளக்கு பகுதி என கூறலாம். அந்த அளவுக்கு இளம் பெண்கள் அதிலும் முக்கியமாக பதினெட்டு வயதுக்கு கீழே உள்ளவர்கள் கூட இதில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயமாகும்.

காலையில் இந்த விபச்சார விடயம் மோசமாகவும், இரவு நேரத்தில் மிக மிக மோசமாகவும் அரங்கேறுகிறது என கூறியுள்ளார்.

அந்த சிட்டி செண்டர் சாலையில் பல வருடங்களாக முடி திருத்தகம் கடை வைத்துள்ள ஒருவர், இந்த தெருவும் இதை சுற்றியுள்ள பகுதியும் முன்னர் மிக நன்றாகவும், ஒழுக்கமாகவும் இருந்தது என்கிறார்.

சில காலமாக தான் இப்படி ஆகிவிட்டது என கூறும் அவர், இந்த பகுதி வழியாக நடக்கும் சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் பயந்து கொண்டு தான் தினமும் இந்த பகுதியை கடக்கின்றனர்.

காலை, மாலை, இரவு என எந்நேரமும் இந்த விபச்சார தொழில் இங்கு நடக்கிறது. இதில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண், குடும்ப வறுமைக்காகவே இதை செய்வதாக கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் அரசும், பொலிசாரும் சீக்கிரம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments