பொது இடத்தில் சிறுமியிடம் அத்து மீறிய பொலிசார்! மக்கள் அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா நாட்டின் Liverpool பெருநகரில் பெரிய வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.

அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் பொலிஸ் குழுவினர் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தரதரவென கைது செய்து இழுத்து கொண்டு செல்வது போல காட்சி உள்ளது.

இந்த வீடியோ காட்சியை எடுத்து இணையத்தில் விட்டுள்ள Melissa என்னும் நபர் கூறுகையில், சம்பவம் நடந்த வணிக வளாகம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்ககூடியதாகும்.

அங்கு 13லிருந்து 15 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் போதை மருந்து வைத்துள்ளதாகவும், சில குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கூறி அவர்கள் சிறியவர்கள் என்றும் பாராமல் மிக கடுமையாக நடந்து கொண்டனர்.

அதுவும் அந்த சிறுமியை மிக கடுமையாக பொலிசார் பிடித்ததில் அவள் முகம் முற்றிலும் சிவப்பாகி விட்டது. அவள் உடலுக்கு ஏதோ ஆகிவிடும் என்றே நாங்கள் பலரும் நினைத்தோம்.

அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் இப்படி சிறுவர்களை பொது இடத்தில் கொடுமைப்படுத்துவது தவறு என கூறியும் அதை பொலிசார் காதி வாங்கிகொள்ளாமல் அவர்கள் மூவரையும் காரில் ஏற்றி சென்றனர் என கூறியுள்ளார்.

தற்போது பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்த மூவரிடமும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments