ஜெசிக்காவை தொடர்ந்து...உலக மக்களை கண்ணீரில் நனைத்த சிறுவன்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜெசிக்காவின் புகைப்படங்கள் வெளியாகி மக்களின் மனதை உருக வைத்தன.

அந்த வரிசையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தந்தை ஒருவர்.

வேல்சின் Bangnor நகரில் வசிக்கும் James Sellers-ன் மகன் Little Logan, 7 வயதாகும் Logan மிக அரிய Rhabdomyosarcoma (RMS) என்ற நோயால் அவதிப்பட்டுள்ளார்.

திடீரென இரவு கண்விழிக்கும் Logan-னுக்கு வியர்த்து கொட்டும், காரணமே எதுவும் இல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டிருப்பானாம்.

விளையாட்டுகள், பொம்மைகள் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் சோகமாய் இருக்கும் Logan-னின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது தந்தை.

மக்களால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு Logan-ன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவமனை வந்து பரிசோதனை செய்து கொள்வதை விரும்ப மாட்டான் எனவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என மகன் கேட்ட பொழுது துடிதுடித்து போனதாக தெரிவித்துள்ளார் James Sellers.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments