பிரித்தானியாவில் வாழ சிறந்த நகரங்கள் இது தான்!

Report Print Basu in பிரித்தானியா
331Shares

பிரித்தானியா நாட்டில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள 31 இடங்களில் 100,000 பேர் ஆரோக்கியமாக வாழக்கூடிய வகையில் உள்ள அடிப்படை வசதிகள் கணக்கீடு செய்யப்பட்டு SBO.net என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

31 நகரங்களில் உள்ள ஜிம், துரித உணவகம், நீச்சல் குளம், விளையாட்டு கிளப் மற்றும் கடைகள், விளையாட்டு நிகழ்வுகள், பொது பூங்கா, சைக்கிள் ஓட்டும் பாதைகள் கணக்கீடு செய்யப்பட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பிரித்தானியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டல் நகரம் 18 ஜிம், 2 மெக்டொனால்ட் உணவகம், 14 நீச்சல் குளம், 45 விளையாட்டு கிளப் மற்றும் கடைகள், 7 பொது பூங்கா, 234 சைக்கிள் ஓட்டும் பாதைகளுடன் மக்கள் மிக ஆரோக்கியமாக வாழ சிறந்த நகரமாக திகழ்கிறது.

ஆரோக்கியமற்ற நகரத்தில் Dudley நகரம் முதல் இடத்ததை பிடித்துள்ளது. இந்த நகரத்தில் 100,000 பேருக்கு 3 ஜிம்கள் மட்டுமே உள்ளது. அதே சமயம், 10 மெக்டொனால்ட் உணவகம், ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் நீச்சல் குளங்கள் 8 மட்டுமே உள்ளது.

Dudley நகரத்தை தொடர்ந்து மக்கள் வாழ ஆரோக்கியமற்ற நகரங்களாக 14 மெக்டொனால்ட் உணவகத்துடன் Walsall நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. Wakefield நகரம் மூன்றாவது இடத்திலும், Wigan நான்காவது இடத்திலும் உள்ளது.

பிரித்தானியாவின் மிக பிரபல நகரமான லண்டன் 5 சைக்கிள் ஓட்டும் பாதைகளுடன் ஆரோக்கியமற்ற நகர பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பிரித்தானியாவில் வாழ சிறந்த இடம் என கருத்தப்படும் லண்டனில் 4 ஜிம்களும், 23 பூங்கா, 3 விளையாட்டு கிளப் மற்றும் கடைகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

31 நகரங்களில் 100,000 பேருக்கு 23 ஜிம்களுடன் Nottingham நகரம் அதிக ஜிம்கள் கொண்ட நகரமாக திகழ்கிறது. Dudley, Walsall, Wakefield நகரங்களில் 3 ஜிம்கள் மட்டுமே உள்ளது.

அதிகபட்சமாக Walsall நகரில் 14 மெக்டொனால்ட் உணவகங்கள் உள்ளது. Kingston நகரில் அதிகபட்சமாக 51 பொது பூங்காவும், ஒரே ஒரு மெக்டொனால்ட் உணவகம் மட்டுமே உள்ளது. Machester நகரில் அதிகபட்சமாக 19 நீச்சல் குளங்கள் உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த பட்டியல் லண்டன் வாழ் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாக அமைந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments