பிரித்தானியாவின் நவீன அடிமைகள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
663Shares

பிரித்தானியாவில் இளம் வயது குழந்தைகள் நவீன அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாக முகப்பு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் படி தெரியவந்துள்ளது.

இதில், 93 சதவீத ஆய்வு முடிவுகளின் படி, இளம் வயது குழந்தைகள் கட்டுமானப்பணிகள், கார்களை துடைப்பது மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவது போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

60 சதவீத முடிவுகளின்படி, பாலியல் சுரண்டல்களுக்காக இளம் வயது குழந்தைகள் குறிவைக்கப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

வீடுகளற்ற குழந்தைகள், பெற்றோர் இன்றி தனியாக வசிக்கும் குழந்தைகள் மற்றும் ஆல்கஹால் மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்களே அதிகமாக குறிவைக்கப்படுகின்றனர்.

சுரண்டல்களுக்காக நாட்டினை கருவியாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதர் தெரசா மே அறிவித்துள்ளதால், பொலிஸ் தலைமை அதிகாரி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டதில், குழந்தைகளை பாலியல் அடிமைகளாக நடத்தி வந்த 200 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இந்த குற்றவாளிகள் அனைவரும், பிரித்தானியா, ரோமானியா மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மொத்தம், 1,689 குழந்தைகள் நவீன அடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். பாலியல் சுரண்டல்களுக்கு எதிராக இதுவரை 60 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதில் 14 நடவடிக்கைகள், குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக 4 நடவடிக்கைகள் மற்றும் திருட்டு குற்றங்களில் குழந்தைகளில் ஈடுபடுத்தியதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப்படி, சிறு வயது குழந்தைகளை நவீன அடிமைகளாக பயன்படுத்தி வந்தவர்களில், அதிகமானோர் பிரித்தானியா மற்றும் ரோமனியர்களுமே என தேசிய பொலிஸ் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

நவீன அடிமைகளை ஒழிப்பதற்காக பிரித்தானிய அரசாங்கம் சார்பில், £33million நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் Amber Rudd கூறியதாவது, நவீன அடிமைகளை ஒழிப்பது என்று எங்களுக்கு சவாலான ஒன்றாகும்.

எங்களுக்கு இருக்கும் இந்த பொறுப்பினை சரியான முறையில் கையாளுவோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments