சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதிய கார்: வெளியான பகீர் வீடியோ

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் 5 பேர் சாலையை கடக்க முயன்றபோது அவர்கள் மீது அதிவேகத்தில் கார் ஒன்று மோதிய பயங்கர காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய தலைநகரான லண்டனில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு ஹேம் பகுதியில் உள்ள Central Park Road சாலையில் 5 பேர் ஷொப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

சாலையை மெதுவாக நடந்துக்கொண்டுருந்தபோது புயல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் 50 வயதான பெண், 12 வயதான சிறுவன் மற்றும் 11 வயதான சிறுமி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 2 பேர் கார் வருவதை கவனித்து தப்பியுள்ளனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய கார் சிறிது தூரம் சென்று நின்றுள்ளது. காரை ஓட்டிய நபர் மற்றொரு பயணி ஆகிய இருவரும் காரை நிறுத்திவிட்டு தப்பியுள்ளனர்.

இக்காட்சியை கண்ட சிலர் உடனடியாக மூவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதிர்ஷ்டவசமாக மூவரும் தற்போது உயிர் பிழைத்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 27-ம் திகதி நிகழ்ந்த இவ்விபத்து அருகில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இவ்வீடியோவை வெளியிட்டுள்ள பொலிசார் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments