கண்ணாடியை உடைத்து வெளியேறிய கொரில்லா: ரணகளமான லண்டன் உயிரியல் பூங்கா!

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா ஒன்று அதன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியதால் பதற்றம் நிலவி வருகிறது.

லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கொரில்லாவால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பூங்கா ஊழியர்கள் மயக்க மருந்துடன் கொரில்லாவை பிடிக்க தீவிரமாக சுற்றி வருகின்றனர்.

இருப்பினும் துப்பாக்கியில் இருப்பது மயக்க மருந்தா அல்லது துப்பாக்கி குண்டுகளா என்பதை பூங்கா செய்தி தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா Cincinatti உயிரியல் பூங்காவில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற கொரில்லாவை சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா தப்பியுள்ளது.

மாலை 5.30 மணி அளவில் தப்பியோடிய கொரில்லாவை 6.30 மணியளவிலே பிடித்து விட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது ஒரு சைக்கோ கொரில்லா என்றும், ஏற்கனவே 2 முறை கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரில்லா தப்பியோடிய சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments