விமான ஓடுத்தளத்தில் மலம் கழித்த பயணி: ரூ.5 லட்சம் அபராதம் விதித்த பொலிஸ்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் விமான ஓடுத்தளத்தில் மலம் கழித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து 68 வயதான சுற்றுலா பயணி ஒருவர் இத்தாலி நாட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

ரியானார் விமானத்தில் பயணம் செய்த அவர் சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியில் உள்ள Brinidisi விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் கழிவறைக்கு செல்ல முடியாத காரணத்தினால், அவர் விமானத்தில் இருந்து இறங்கி ஓடுத்தளத்தில் நடந்து சென்றுள்ளார்.

ஆனால், இயற்கை உபாதையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால் ஓடுத்தளத்திலேயே ஆடைகளை நீக்கிவிட்டு மலம் கழித்துள்ளார்.

இதனை விமான நிலைய பொலிசார் கண்டு அதிர்ச்சியுற்று சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பயணியை கைது செய்தனர்.

பயணி பல காரணங்களை கூறினாலும் அவற்றை பொலிசார் ஏற்றுக்கொள்ள வில்லை. விமான ஓடுப்பாதையில் மலம் கழித்த குற்றத்திற்காக பயணிக்கு 3,000 பவுண்ட்(5,37,194 இலங்கை ரூபாய்) அபாரதம் விதித்து பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

சிறை தண்டனையை தவிர்க்க வேறு வழியில்லாத காரணத்தினால் சம்பவம் நடந்த மறுநாள் அப்பயணி 3,000 பவுண்ட் அபராதம் செலுத்தி விட்டு பிரித்தானிய நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments