புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை: சிகிச்சைக்கு பணத்தை குவிக்கும் ரசிகர்கள்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த நடிகையும் முன்னாள் விளம்பர மொடல் அழகி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது சிகிச்சைக்கு ரசிகர்கள் பணத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள Yorkshire என்ற நகரத்தை சேர்ந்தவர் Leah Bracknell(52). ஆங்கிலப்படங்களில் சிறு வேடங்களில் நடித்த இவர் பின்னர் விளம்பர துறையில் நுழைந்தார்.

கடந்த 1989 முதல் 2005ம் ஆண்டு வரை பிரித்தானியாவில் வெளியான பிரபல வாசனை soap விளம்பரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இதுமட்டுமில்லாமல், பிபிசி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதால் இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில், 5 வாரங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயை குணப்படுத்த அதிகளவில் செலவாகும் என்பதால் அவரது கணவர் இணையத்தளம் மூலம் நிதியுதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல மொடல் அழகிக்கு ஏற்பட்டுள்ள நிலையைக் கண்டு தற்போது ரசிகர்கள் பணத்தை குவித்து வருகின்றனர்.

இதுவரையில் 50,000 பவுண்ட்(90,89,946 இலங்கை ரூபாய்) வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.

ரசிகர்களின் அன்புக்கு நன்றி கூறிய நடிகை இன்னும் சில நாட்களில் ஜேர்மனி நாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments