கற்பழித்து கொல்லப்பட்ட பிரித்தானிய சிறுமி: இரண்டு இந்தியர்கள் விடுதலை

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு இந்தியர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய நாட்டில் உள்ள Devon நகரை சேர்ந்தவர் Scarlett Keeling(15). இவர் கடந்த 2008ம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்தியாவில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் அவர் தங்கியுள்ளார்.

இந்நிலையில் 2008ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி அதிகாலை நேரத்தில் Anjuna கடற்கரையில் சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த Samson D'Souza (36), Placido Carvalho (47) ஆகிய இருவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு 2010ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியான போது, போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இருவரும் நிரபராதிகள் எனக் கூறி நீதிபதிகள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.

இவ்வழக்கு தீர்ப்பு சிறுமியின் தாயாரை வெகுவாக பாதித்துள்ளது.

தீர்ப்பு குறித்து அவர் பேசியபோது, ‘இந்திய நீதிதுறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யாகி விட்டது.

என் மகள் இந்த நாட்டில் தான் கற்பழித்து கொல்லப்பட்டாள். இதற்கு நீதி கிடைக்காமல் ஓயமாட்டேன். இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக’ தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments