பிரித்தானியாவில் 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவனும் மனைவியும் சேர்ந்து 10 வயது சிறுவனை இரண்டு வருடம் வீட்டு சிறையில் வைத்து கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

லண்டணை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் சகோதரியின் 10 வயது மகனை இரண்டு வருடமாக வீட்டு சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அந்த சிறுவன் ஒரு வருடமாக குளிக்கவில்லை மற்றும் அவன் இருந்த அறையின் டாய்லட் ஆறு மாதங்களாக கழுவ படாமல் இருந்துள்ளது. ஒரு நாள் குழந்தைகள் உதவி சங்கத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீட்டுக்கு ஏதேச்சியாக சென்றுள்ளார்.

அப்போது அங்கு சிறுவன் அடைப்பட்டிருந்த விடயத்தை பொலிசாரிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து அந்த சிறுவனை மீட்டு அந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அந்த சிறுவன் அவர்களிடத்தில் 2010 ஆண்டு முதல் தங்கியுள்ளான். அவனின் பெற்றோர் வேறு நாட்டில் இருப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் கைது செய்யப்பட்ட அந்த தம்பதிக்கு நீதிமன்றம் 18 மாத சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments