அதிக எடையால் பரிதவித்த குடும்பம்! கனவாகிப் போன ஆசை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

உடற்பருமன் அதிகம் கொண்ட காரணத்தால் ஓய்வூதியம் பெறும் நபரின் குடும்பத்தினருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Anthony Poppel(69) என்ற முதியவர், தனது கும்பத்தினரோடு Snowdon மலை ரயில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த ரயில்வே பாதை 4.5 மைல் கொண்டு குறுகிய பாதை ஆகும். எனவே இந்த ரயில் பெட்டிக்குள் அதிக எடை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

இந்நிலையில், இந்த முதியவர் தனது குடும்பத்தினருடன் North Wales peak என்ற சிகரத்திற்கு சுற்றுலா செல்வதற்காக, ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார்.

அதன்பொருட்டு ரயில்வே தளத்திற்கு 11.30 மணியளவில் வந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏனெனில் ரயிலில் கூட்டம் அதிகரித்து, இவரது குடும்பத்தினர் இருப்பதற்கே இடமில்லை. மேலும் இந்த குடும்ப உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் எதிரே அமர்வதற்கும் மறுத்துவிட்டனர்.

அதோடு மட்டுமல்லாமல், இந்த முதியவரின் வீட்டில் உள்ள நான்கு பேர்கள் அளவுக்கதிகமான எடையில் இருந்துள்ளனர். இதனால் இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு போதிய இடமில்லை.

மேலும் ரயில்வே அதிகாரிகளும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதிக எடையில் இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, நீங்கள் முன்பதிவு செய்த பணத்தினை திருப்பி வாங்கிகொள்ளுங்கள் என கூறியுள்ளனர். மேலும் அந்த முதியவரிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர்.

அதன்படியே, அந்த முதியவருக்கு £32.50 பணம் திருப்பி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 130,000 பயணிகள் Snowdon மலை ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர், இந்த ரயில் பாதை 1896 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த ரயிலானது Llanberis - இல் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்று, இந்த Snowdon மலைப்பாதை வழியாக பயணித்து வேல்ஸ் சிகரத்தை நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments