அண்டை வீட்டு பெண்ணை ஐ.எஸ் பொட்டை நாயே என வசைபாடிய பிரித்தானிய ராணுவ வீரர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

முன்னால் பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் தமது அண்டை வீட்டில் குடியிருக்கும் பெண்களை ஐ.எஸ் பொட்டை நாயே என திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் டெர்பி நகரில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரரான கிறிஸ்டோபர் பிளர்டொன். இவரது வீட்டின் அருகாமையில் சீக்கிய குடும்பம் ஒன்று குடியிருந்து வந்துள்ளது.

அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த வீட்டில் வசிக்கும் பெண்களை இவர் தரக்குறைவாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். நாளடைவில் இவரது பேச்சுக்கள் இனவாதமாக மாறியுள்ளது. பன்றி பொட்டை நாயே என்றெல்லாம் வசைபாடிய இவர் அங்குள்ள பெண்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து இதுபோன்ற வசைபாடலை தொடர்ந்துள்ள இவர் அவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் எனவும் திட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சீக்கிய பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளிடம் முதலில் மறுத்த அவர் பின்னர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட பெண்களை பயமுறுத்தியுள்ளதாக தெரிவித்த விசாரணை அதிகாரிகள், அவர்கள் அந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயரவும் இந்த நிகழ்வுகள் காரணமாக அமைந்துள்ளது என குற்றம்சாட்டினர்.

மட்டுமின்றி மதுபோதையில் முன்னர் ஏற்படுத்திய களேபரங்களை குறிப்பிட்ட நீதிபதி அந்த நபருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் டெர்பி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments