மேகத்தில் தீவு போன்று காட்சியளித்த அதிசய படம்!

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் வொய்ட் தீவு போன்ற காட்சி வானத்தில் உள்ள மேகத்தில் தோன்றியதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

டெனிஸ் மோர்கன் என்னும் பொலிஸ்காரர் விடுமுறை அன்று ஒர்லான்டோவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது வானில் ஒரு அதிசய காட்சியை மேகத்தில் பார்த்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், அப்போது இரவு 7.45 மணி இருக்கும். அந்த சமயத்தில் வானத்தில் உள்ள மேகத்தில் பிரித்தானியாவில் உள்ள வொய்ட் தீவு போன்ற காட்சி தெரிந்தது, இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஜியோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக்ஸில் 1988 க்கு பிறகு 64 தங்கம் மற்றும் 167 மொத்த பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் இரண்டாவது இடம் பிடித்தது.

அதை இயற்கையும் கொண்டாடும் விதத்திலே மேகத்தில் இந்த அதிசயம் நடந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments