பிரித்தானியாவில் முடிந்தது கோடைகாலம்: வந்துவிட்டது குளிர்காலம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

100 வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 31.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே அதிகமான வெப்பநிலையாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் 32 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த தினங்கள் வரை வெயில் சுட்டெரித்ததால், மக்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென கடந்த 16 ஆம் திகதி கன மழை பெய்ய ஆரம்பித்த சில மணி நேரங்களில் மத்திய லண்டன், ஹாம்ஷயர், சுரே போன்ற இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடி வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சில பள்ளிகள் 2 நாட்கள் மூடப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சுமார், 3 நாட்களாக வெளியிலின் உக்கிரத்தால் தாக்கத்திற்கு ஆளான மக்கள், குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து பயணிகள் கூறியதாவது, இந்த வாரம் மிகவும் அமைதியான வாரமாக இருப்பது மிகவும் நல்ல செய்தியாகும், கடந்த வாரம் மேற்கு பகுதிகளில் மழை பெய்தாலும், அதனால் பெரிய இழப்பு ஏதும் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும், வெயில் காலம் முடிந்துவிட்டதால் எங்களால் சுலபமாக பணிக்கு செல்ல முடிகிறது, அடுத்த வாரத்திற்குள் எங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் திரும்பிவிடும் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments