வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை: பிரிவால் தவிக்கும் பெற்றோர்

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த கிரிஷ் - மைக்கேல் தம்பதிகளுக்கு திருமணமாகி பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற அவர்கள் முடிவு செய்தார்கள்.

ஆனால் பிரித்தானியாவில் இதற்கு கடுமையான சட்டம் உள்ளதால் அதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், இந்தியாவில் உள்ள மும்பைக்கு சென்று குழந்தையை பெற அவர்கள் முடிவு செய்தனர்.

ஒரு வருடத்திற்கு பிரித்தானியாவை சேர்ந்த 1000 பேர், இந்தியாவுக்கு சென்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.

இதற்கென்று பல ஏஜென்ஸிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்த அந்த தம்பதி ஒரு பெண்ணை வாடகை தாயாக முடிவு செய்தார்கள்.

25 வயதான அந்த இளம் பெண்ணுக்கு 19,000 பவுண்ட் சம்பளம் தரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் கருமுட்டையும் , கிரிஷ் விந்து இரண்டும் சேர்க்கப்பட்டு அதன் மூலம் அந்த வாடகை தாய் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

அதற்கு லில்லி என அவர்கள் பெயர் வைத்தார்கள். பின்னர் குழந்தையுடன் பிரித்தானியாவுக்கு செல்ல அந்த தம்பதி முடிவு செய்தார்கள். ஆனால் குழந்தைக்கு மெடிக்கல் விசா கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் குழந்தையை இந்தியாவில் விட்டு விட்டு பிரித்தானியா செல்லும் சூழல் ஏற்ப்ட்டது. இங்கு யாரும் இல்லாததால் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டு செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளபட்டார்கள்.

ஊருக்கு சென்ற அவர்கள் குழந்தை நினைப்பிலேயே சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்படுகின்றனர்.

பாஸ்போட், விசா பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதால் சீக்கிரம் தங்கள் குழந்தை தங்கள் கையில் தவழும் என்ற நம்பிக்கையில் பிரித்தானிய தம்பதி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments