பிரித்தானியாவில் உள்ள தேவாலயங்களுக்கு வந்த திடீர் சிக்கல்!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள தேவாலயங்களில் மணியடிக்க ஆட்கள் குறைவாக உள்ளனர் என தேவாலங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள தேவாலயங்களில் மணிகள் அடிப்பது வழக்கம். இது அந்நாட்டு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தற்போது அந்நாட்டில் உள்ள தேவலாயங்களில் மணி அடிப்பதற்கு யாரும் புதிதாக முன்வர வில்லை எனவும், பிரம்மாண்டமான இந்த மணியை அடிப்பதற்கு குறைந்த அளவே ஆட்கள் உள்ளதாகவும் தேவாலயங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பிரம்மாண்ட மணி மிகவும் கடினமாக இருக்கும் என்கிற காரணத்தினாலும், அவ்வாறு மணி அடிக்கும் போது அதிகப்படியான ஒலி எழும்பும் காரணத்தினாலும் , 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை நியமிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளோம்.

ஆனால் அந்த வயதில் உள்ள இளைஞர்களை தேடிப் பிடித்து பணியில் அமர்த்துவது மிகவும் கடினமாக இருக்கின்றது. எனவே இப்பற்றாக்குறையை போக்குவதற்கு ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட தேவாலயங்களில் மணி அடிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேவாலய அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

பிரித்தானியாவில் தற்போது 40000 பேர் ஒலி எழுப்பும் பணியில் உள்ளனர். ஆனால் இது போதாத நிலையில், இதற்கு முடிவு கட்ட கடந்த மே மாதம் Portsmouth பகுதியில் 180 பேர் அடங்கிய ஒரு கூட்டம் நடைபெற்றது,

அதில் பாதிக்கும் மேலானோர் தேவாலயங்களுக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, தேவாலயங்களுக்கு மணி அடிக்க ஆட்கள் கிடைப்பது சற்று அரிதான காரியம் தான் என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments