மிக கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி: சிரித்தபடி வேடிக்கை பார்த்து ரசித்த மக்கள்! அதிர்ச்சி வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் பொது இடத்தில் வைத்து 14 வயது சிறுமி ஒருவர் இரண்டு பெண்களால் மிக கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Birmingham அருகே உள்ள Erdington பூங்காவில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் சிரித்தபடி வேடிக்கை பார்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிறுவன் ஒருவன் குறித்த காட்சியை பதிவு செய்துள்ளான். அதை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறித்த வீடியோவில், எதிர்பாராதவிதமாக இரண்டு பெண்கள் வந்து, சிறுமியை கீழே தள்ளி கால்களால் உதைத்து மிக கொடூரமாக தாக்குகின்றனர். இதன்போது அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்காமல் சிரித்தபடி வேடிக்கை பார்க்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், ஏன்? எதற்காக இப்படி அடித்தார்கள்? என்று தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் திடீரென தாக்கியுள்ளனர். இந்த வகையான பெண்கள் மிக அருவருப்பானவர்கள், இந்த பெண்கள் தங்களை குறித்து வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மூத்த சகோதரி கூறுகையில், சம்பவம் குறித்து இன்னும் பொலிசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் புகார் அளிப்போம், அதற்கு முன்னால் பதிலடி கிடைக்கும் என்ற பயத்தை அவர்களுக்கு காட்ட விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சமீபத்தில் Guiseley நகரத்தில் நடுரோட்டில் சிறுமி ஒருவரை இரண்டு பெண்கள் சேர்ந்து மிக கொடூரமாக தாக்கியது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments