தமிழர் தோழமை இயக்கமும், தொழிலாளர் கட்சியின் தலைமைத்துவமும்

Report Print Tamil Solidarity in பிரித்தானியா
85Shares

பிரெக்சிட் கருத்துக்கணிப்புக்கு பிறகு, ஐக்கிய ராச்சியாயத்தில் பல்வேறு துறைகளில் நடக்கும் மாற்றங்கள் அங்கு வசிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

முக்கியமாக, ஐக்கிய ராச்சியாயத்தில் நடந்து கொண்டு இருக்கக்கூடிய அரசியல் மாற்றங்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவை. அம்மாற்றங்களில் (Labour Party) தொழிலாளர் கட்சியின் தலைமைத்துவத்துகான போட்டிக்கு முக்கிய இடமுண்டு.

இந்த போட்டியில் தமிழர் தோழமை(Tamil Solidarity) என்னும் இயக்கம், ஜெரிமி கோப்றினுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறது.

பல்வேறு இடங்களில் நடக்கும் பிரச்சாரங்களில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், ஐக்கிய ராச்சிய வாழ் தமிழர்கள் ஜெரிமியை ஆதரிக்க வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதில் ஒரு பகுதியாக, நேற்று Highbury Fields என்னும் இடத்தில் நடைபெற்ற பேரணியில் தமிழர் தோழமை இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் எழுத்தாளராகிய சேனன் அவர்களின் உரை அப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பல்லின மக்களையும் கவர்ந்துள்ளது.

நாம் வென்றேயாக வேண்டும்,

நம்மால் வெல்ல முடியும்,

நாம் உறுதியாக வெல்வோம்.

என தனது உரையை தொடங்கிய சேனன் அவர்கள், தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெரிமி கோப்ரின் தமிழர்களின் நீண்ட கால நண்பர், இலங்கையில்1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனவழிப்பில் தொடங்கி 2009 ஆம் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான போரட்டங்களையும் கடந்து இன்று வரை நம்மோடு நமக்கு ஆதராவாக இருக்கிறார்.

அவரை ஆதரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், ஜெரிமி கோப்ரின் தொழிலாளர் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வருவதை வலதுசாரிசிந்தனையாளர்களும், தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாத கட்சியும் (Conservative) எதிர்க்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜெரிமி கோப்ரின் தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர் என்பதல்ல, மாறாக அவர் மீண்டும் தலைமை பொறுப்பிற்கு வந்தால், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று, அவர்அடுத்த பிரதமராக பதவியேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற பயத்தினால் தான் என்று கூறினார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், ஐக்கிய ராச்சியாய அரசியலில் தமிழர்கள் மற்றும் கறுப்பின மக்களின் பங்கு மிக குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் சில வலதுசாரி பத்திரிக்கைகள் சித்தரிப்பதை போல் நாம் அனைவரும் அறிவற்றவர்கள் என்பதல்ல உண்மை. நம் சிந்தனைகளையும், நம் தேவைகளையும் பொதுவெளிக்கு எடுத்துச் செல்ல எந்த பிரதான கட்சியும் தயாராக இல்லை என்பதே காரணம். இந்த குறை ஜெரிமி கோப்ரின் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் மூலம் தீர்த்து வைக்கப்படும் என்பதாக தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments