வானில் வட்டமடித்த மர்மப் பொருள்!

Report Print Fathima Fathima in பிரித்தானியா
815Shares

ஸ்கொட்லாந்து Ayr துறைமுகத்தின் மீது கறுப்பு நிற மர்மப் பொருள் ஒன்று வட்டமடித்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஸ்கொட்லாந்தை சேர்ந்த Jamie Cooper என்ற 13 வயது சிறுவனே இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் 15 நிமிடங்களாக ஒரு மர்ம பொருள் வானத்தில் தெரிவதை கண்ட Jamie, கைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இது ஹெலிகொப்டராக இருக்கலாம் என கருதிய Jamie, அதனை தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

இதுபோன்றதொரு பொருளை தான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், UFO-ஆக இருக்கலாம் எனவும் Jamie தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் 15 நிமிடங்களுக்கும் மேலாக அந்த பொருள் அங்கேயே தொங்கி கொண்டிருந்ததை Jamie பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments