பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதிவியேற்றுள்ள தெரேசா மே. முதல் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்சுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.
எதிர்வரும் யூலை 21ம் திகதி பாரிஸ் செல்லும் அவர் அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஒலாந்தை சந்தித்து பேசவுள்ளார்.
ஓலாந்துடனான சந்திப்பில் பயங்கரவாதம் குறித்தும், இரு நாட்டு பொருளாதார கொள்கைகள் குறித்தும் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரான்சின் நைஸ் நகரில் தாக்குதல் இடம்பெற்றபோது, தெரேசா மே ஆதரவு குரல் எழுப்பியிருந்தார். பிரெஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் எது தேவையோ அதை செய்வோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தோள் கொடுப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்பயணத்தின் போது, வெளிப்புற பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பிரித்தானியா வெளியேற்றத்தை செயல்படுத்துதல் மற்றும் பிரான்ஸ்-பிரிட்டிஷ் உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தெரேசா மே உரையாட இருப்பதாக கூறப்படுகிறது.