பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! ஓர் எச்சரிக்கை
2220Shares

30 வருடங்களுக்குள் பிரித்தானியாவிற்கு அழிவு நேரிட வாய்ப்புள்ளதாக காலநிலை நிபுணர்கள் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்து காலநிலை மாற்றம் இடர் மதிப்பீடு 2017 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 சிறந்த காலநிலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நடத்திய ஆய்வில், வரவிருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பிரித்தானியா வெள்ளம், வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் கடும் அவதிக்குள்ளாகி கடும் அழிவினை சந்திக்கும் என்று கூறியுள்ளனர்.

வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • குளிர்ச்சி மிகுந்த நாடான பிரித்தானியாவில் தற்போது 20 சென்டிகிரேட் வெப்பம் நிலவி வருகிறது, ஆனால் இந்த வெப்பநிலை 40 ஆக அதிகரிக்கும்.

  • கடந்த 2003 ஆம் ஆண்டில் 38.8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது, இதே போன்று 2040 ஆம் ஆண்டில் வெப்பநிலை உயர்ந்து என்றும் இந்த வெப்பமிகுதியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

  • 40C ஆக இருப்பது படிப்படியாக 48C (118.4F) ஆக உயரும், மேலும் பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், 1 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் சேதமடைகின்றன, இந்த சேதாரமானது 35 வருடங்களுக்குள் இரட்டிப்பாகும், அதாவது 1.9 மில்லியன் ஆக அதிகரிக்கும்.

  • கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டுவிடும், எனவே உணவுகளை உற்பத்தி செய்யமுடியாத காரணத்தால் உணவு பற்றாக்குறை ஏற்படும்.

  • பிற இடங்களை ஒப்பிடுகையில் Eastern England மற்றும் Scotland’s ஆகிய இடங்களில் நிலங்கள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், விவசாய நிலங்கள் மட்டுமின்றி மீன் உற்பத்தியையும் பாதிக்கும், வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் 40 சதவீதம் பாதிக்கப்படும்.

  • தெற்காசிய நாடுகளை மட்டுமே பாதித்துள்ள ஸிகா வைரஸின் தாக்கம், பிரித்தானியாவிலும் இனி அதிகரிக்கும், ஏனெனில் வெப்பமிகுதியின் காரணமாக இந்த வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற காலநிலை பிரித்தானியாவில் நிலவு இருக்கிறது.

  • மிகவும் குறிப்பாக, கடும் வறட்சியின் காரணமாக மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளனர், மேற்கூறியவை அனைத்தும் இனிவரும் 30 ஆண்டுகளுக்குள் நடக்கும் என்றும் 2050 ஆம் ஆண்டில் இவை அனைத்தும் முற்றிலும் நடந்து முடிந்துவிடும் என்பது உறுதி என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments