பள்ளி குழந்தைகள் ஆபத்தான மாசுபாட்ட காற்றை சுவாசிக்கின்றனர்: லண்டன் மேயர் தகவல்

Report Print Basu in பிரித்தானியா
பள்ளி குழந்தைகள் ஆபத்தான மாசுபாட்ட காற்றை சுவாசிக்கின்றனர்: லண்டன் மேயர் தகவல்

லண்டனில் கிட்டதட்ட 90 உயர்நிலை பள்ளிகளில் குழந்தைகள் சட்டவிரோதமாக ஆபத்தான மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக மேயரின் அறிக்கையில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2010ம் ஆண்டு நாட்டின் தலைநகரில் நுாற்றுக்கணக்கான ஆரம்ப பள்ளிகள் மாசு கட்டுப்பாட்டை மீறியதாக வெளியிட்டிருந்தார்.

மேலும், தலைநகரை சுத்தப்படுத்த முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

சமீபத்தில் நடந்த ஆய்வில் முதன் முறையாக தலைநகரில் உள்ள Westminster நகரில் உள்ள உயர்நிலை பள்ளிகள் நச்சுவாயு, நைட்ரஜன் ஆக்சைடு (NO2 என்ற) சட்டவிரோத நிலைகள் வெளிப்படுத்துவதை கண்டறிந்துள்ளது.

Tower Hamlets, Southwark பெருநகரங்களில் உள்ள உயர்நிலை பள்ளிகளும் மாசு கட்டுப்பாட்டை மீறியதாக தெரியவந்துள்ளது.

100 உயர்நிலை பள்ளிகளில் 86 பள்ளிகள் மாசு கட்டுப்பாட்டை மீறுவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறியதாவது, வெளியாகியுள்ள அறிக்கை கவலையளிக்கிறது. லண்டனில் விரைவாக மாசு அளவை குறைக்க வழிவகுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments